ஒற்றை கால் நரம்பு வலி (Sciatica)
- Varmakalai Aasan P.Blesswin
- Mar 4, 2021
- 2 min read
Updated: Mar 6, 2021
நம் மூளையிலிருந்து முதுகு தண்டுவடம் வழியாக கை, கால்களுக்கு

செய்திகளை கடத்த நரம்பு செல்கின்றது இந்த நரம்பு பாதிப்படையும் பொழுது வரும் வலி, வீக்கம், கால் உளைச்சல், உட்கார இயலாமை இதை ஒற்றைக்கால் நரம்பு வலி அல்லது Sciatica என்று சொல்கிறோம்,
தண்டுவடத்தில் உள்ள நரம்பு பாதிப்படையும் பொழுது பெரும்பாலும் ஒரு பக்க கால் நரம்பையே அதிகம் பாதிக்கும் சிலருக்கு வலதுகால் சிலருக்கு இடது கால் அதிகம் பாதிப்படைந்தவருக்கு இரு கால்களிலும் வலி உளைச்சல் வரும்,வலி நிவாரணி மருந்துகள் உட்கொண்டாலும் வலி சரியாகாது, மிகவும் வேதனை தரும்.
" பயம் வேண்டாம் நம் பாரம்பரிய வர்மக்கலை மூலம் பூரணமாக குணப்படுத்த முடியும் "
நரம்பு பாதிப்படைய காரணங்கள் :-
1.விபத்து
2நிமிர்ந்து உட்காராமல் கூன் போடுவது
3.இருசக்கர வாகனம் அதிகமாக குனிந்து இருந்து ஓட்டுவது
4.அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவது
5.மரபணு பிரச்சனை
விபத்து :-
நாம் கீழே விழுவதாலோ, அடி இடி படுவதாலோ பாதிப்படைகிறது
இதை தகுந்த வர்மக்கலை மருத்துவரை அனுகினால் பூரண குணம் கிடைக்கும்
நிமிர்ந்து உட்காராமல் கூன் போடுவது:-

நாம் நாற்காலியில் உட்காரும்பொழுதோ அல்லது நடக்கும் பொழுதோ கூன் போடுவதால் நம் முதுகுதண்டுவட எலும்பிற்கு இடையில் உள்ள ஜவ்வானது நசுங்கப்பட்டு வீங்கி விடுகிறது இது மூளையிலிருந்து வரும் நரம்பை நசுக்குவதால் நமக்கு தாங்க முடியாத முதுகு வலி, கால் வலி உளைச்சல் ஏற்படுகிறது,
இதற்கும் தகுந்த வர்மக்கலை மருத்துவரை அனுகினால் பூரண குணம் கிட்டும்
இருசக்கர வாகனம் குனிந்து உட்கார்ந்து ஓட்டுவது :-
நாம் கூன் போட்டோ அல்லது குனிந்து உட்கார்ந்துகொண்டோ வாகனம் ஓட்டும்பொழுது ஏற்கனவே நான் சொன்னது போல தண்டுவடத்தில் உள்ள
ஜவ்வானது நசுங்க ஆரம்பிக்கும், பின் நாம் இருசக்கர வாகனத்தில் மேடு பள்ளத்தில் குலுங்கி செல்லும் பொழுது ஜவ்வானது காயமாகி வீங்கிவிடும், இந்த வீங்கிய ஜவ்வே மூளையிலிருந்து வரும் நரம்பை பழுதடைய செய்கிறது.
அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவது:-
நாம் ஏடாகூடமாக அதிக எடையுள்ள பொருட்களை சக்தி கூட்டி குனிந்து தூக்கும் பொழுது ஜவ்வு மற்றும் தண்டுவட எலும்பு தன்னிலையிலிருந்து மாறிவிடும்
மரபணு பிரச்சனை :-
இது பரம்பரையாக எலும்பை மற்றும் ஜவ்வை பற்றிய நோய் உள்ளவர்களுக்கும் தண்டுடம் பாதிக்கப்பட்டு ஜவ்வானது தன்னிலை மாறி நரம்பை பாதிக்கிறது.
வராமல் தடுப்பது எப்படி ?
1.தினம் சரியான பாரம்பரியமான உடற்பயிற்சி அவசியம்
2.எப்பொழுதும் நேராக நிமிர்ந்து உக்கார வேண்டும், இருசக்கர வாகனம் மற்றும் மகிழுந்தில் சென்றாலும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்
3.படுக்கும் இடம் சமமாக இருத்தல் வேண்டும்
4.சரியான உணவு பழக்கம் முக்கியம்
வந்தபின் சரி செய்வது எப்படி ?

பாரம்பரியமாக நம் வர்மக்கலை மருத்துவம் மூலம் சரி செய்து வருகிறோம்,நோயின் தீவிரம் பொறுத்து நாட்கள் மாறுபடும், முழுமையாக பூரணமாக குணப்படுத்தலாம்.
அறுவைசிகிச்சை அவசியமா ?
அறுவைசிகிச்சை தான் தீர்வு என்பது மருத்துவரின் இயலாமையின் வெளிப்பாடே அன்றி அறுவை சிகிச்சை தேவையற்றது.
வர்மக்கலை ஆசான் பீ.பிளஸ்வின்
+919487261280
அருமை.