top of page

கழுத்துவலி காரணம் & தீர்வு (C1-C7)

Updated: Mar 26, 2021

இந்நாட்களில் கழுத்து வலி இல்லாதோரின் எண்ணிக்கை தான்

ree

சொற்பமாகிவிட்டது, கலுத்துவலியும் வாழ்வின் ஒரு அங்கம் போல மக்கள் சகித்து வாழ பழகிவிட்டனர் காரணம் நிரந்தர தீர்வு கிடைக்காததே, எந்த மருத்துவரிடம் சென்றாலும் வலி மருந்து தந்து தற்போதைக்கு அதை அடக்கி போதையில் வைத்திருப்பர் மருந்தின் வீரியம் குறைந்ததும் வலி வர ஆரம்பிக்கும், வலி மாத்திரைகள் நம் உள்ளுறுப்பை குறிப்பாக நம் சிறுநீரகத்தை பாதிக்கும் என்பது குறிப்பிடதக்கது.


பின் இதற்கு நிரந்தர தீர்வே இல்லையா என்றால் உள்ளது!

ree

கழுத்தில் பிரச்சனை இருந்தால் கைகளில் வலி, உளைச்சல், மரத்துபோதல், தலைசுற்று போன்றவை உண்டாகும் ஆதலால் கை உளைச்சல் மரத்துபோதல் இருந்தால் கழுத்தில் பிரச்சனை உள்ளதா என்று ஆராய்ந்து அறிய வேண்டும்.


முதலில், கழுத்து வலி வரும் காரணங்கள், அதை நாம் எப்படி சரி செய்வது, வராமல் எப்படி தடுப்பது என்பதை விரிவாக பார்ப்போம்.


கழுத்துவலி வரும் காரணங்கள் :-

1.அடி படுதல்

2.சரியான நிலையில் படுக்கையில் படுக்காததால் வரும் பிடி வலி உளைச்சல்

3.கழுத்தை குனிந்தவாறு தொலைபேசி (mobile phone), புத்தகம் பார்த்தல்.

4.வாயு தொந்தரவு

5.கடினமான எடையை தூக்குதல்

6.குனிந்தவாறு வாகனம் ஓட்டுதல்

7.தவறான உடற்பயிற்சி முறை


அடிபடுதல் :-

நாம் கீழே விழுவதாலோ யாராவது தாக்குவதாலோ ஏற்படும் காயத்தினாலும் நரம்பு பாதிப்பதாலும் கழுத்து வலி உளைச்சல் வரும் இது நாட்கள் செல்ல செல்ல கைகளில் வலி உளைச்சல் மரத்துபோதல் போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும்,கைகளில் வலி உளைச்சல் வர கழுத்தில் உள்ள பிரச்சனையே முக்கிய காரணமாக உள்ளது.


சரியான நிலையில் படுக்காததால் வரும் பிடி வலி :-

ree

இரவு நாம் படுக்கும் பொழுது சரியான நிலையில் படுக்காதது,மேடும் பள்ளமும் உள்ள இடத்தில் படுப்பது போன்றவைகளால் கழுத்து நரம்பு பிடி, கழுத்து எலும்பு ஜவ்வு பாதிப்பு ஏற்படும்.




ree

கழுத்தை குனிந்தவாறு தொலைபேசி (mobile phone) புத்தகம் உபயோகித்தல் :-

நாம் தொலைபேசியை குனிந்தவாறு பயன்படுத்தும்பொழுது நமது கழுத்து எலும்பு நடுவில் உள்ள ஜவ்வானது நசுங்கப்பட்டு வீங்கும் இது நமது மூளையில் இருந்து வரும் நரம்பை பாதிக்கும் இதனால் கழுத்து வலி கைகளில் உளைச்சல் வலி மரத்துபோதல் உண்டாகும்.


வாயு தொந்தரவு :-

உடலின் கழிவுகள் சரிவர வெளியேறாமல் உள்ளே தங்குவது அல்லது உணவு முறை சரியில்லாதது போன்ற காரணங்களால் உடலில் வாயு ஏறிவிடும் இதனாலும் தோள்பட்டை உளைச்சல் கழுத்து உளைச்சல் கை உளைச்சல் வலி போன்றவை வரும் , இந்த வலி ஒவ்வொரு நேரமும் இடம் மாறி மாறி வரும் .


கடினமான எடையை தூக்குதல்:-

எடையை தூக்கும் பொழுது முறையாக தூக்காமல் தூக்குவதால் கழுத்து பகுதியில் உள்ள நரம்புகளில் பிடி ரத்தகட்டு ஏற்படும்.



ree

குனிந்தவாறு வாகனம் ஓட்டுதல்:-

நாம் கூன் போட்டோ அல்லது குனிந்து உட்கார்ந்துகொண்டோ வாகனம் ஓட்டும்பொழுது ஏற்கனவே நான் சொன்னது போல கழுத்தில் உள்ள ஜவ்வானது நசுங்க ஆரம்பிக்கும், பின் நாம் இருசக்கர வாகனத்தில் மேடு பள்ளத்தில் குலுங்கி செல்லும் பொழுது ஜவ்வானது காயமாகி வீங்கிவிடும், இந்த வீங்கிய ஜவ்வே மூளையிலிருந்து வரும் நரம்பை பழுதடைய செய்கிறது. இது தான் பெரும்பாலும் தற்போது பல பேருக்கு பாதிப்பாக உள்ளது, இந்த பாதிப்பு கண்டிப்பாக கையில் உளைச்சல் மரத்துபோதல் போன்றவை உண்டுபண்ணும்.


தவறான உடற்பயிற்சி முறை:-

நம்மிடம் மருத்துவத்திற்கு வரும் பல பேருக்கு கழுத்து பிடிப்பிற்கு முக்கிய காரணம் இணையதளத்தை பார்த்துவிட்டு முறையில்லாமல் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதே, ஆதலால் முறையான ஆசிரியரிடம் கற்று உடற்பயிற்சி செய்யவும்.


வராமல் தடுப்பது எப்படி?

1.சரியான உடற்பயிற்சி

2.அமைதியான தூக்கம்

3.நிமிர்ந்த நிலையில் அமர்ந்து தொலைபேசி, புத்தகம் பயன்படுத்துவது

4.வாகனம் ஓட்டும் பொழுது நிமிர்ந்த நிலையில் அமர்வது

5.மலக்கட்டு இல்லாமல் பார்த்து கொள்வது

6.ஆரோக்கியமான உணவை உண்பது


வந்தபின் எப்படி சரி செய்வது எப்படி?

ree
ree

சரியான முறையில் தகுந்த மருத்துவரை அணுகி எதனால் இப்பிரச்சனை வந்தது என கண்டறியவேண்டும், பின் அதை சரி செய்யும் வழியை அறிந்து சரி செய்துகொள்ளலாம்.

நமது வர்மக்கலையில் இதற்கு சிறந்த தீர்வு உள்ளது.நமது மனநிலை மற்றும் பழக்க வழக்கங்களே நமது உடல் உபாதைகளுக்கு காரணமாக அமைகிறது, ஆதலால் நம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோம்.



சேவலோன் வர்மக்கலை

+919487261280



Comments


bottom of page